குத்பியா மன்ஜில் - எங்களைப் பற்றி

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ.

இந்த இணைய தளம் வழியாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் இதன் மூலமாக சரியான இஸ்லாமிய தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க ஆசிக்கிறோம். இந்த இணைய தளம் மூலமாக நாங்கள் உங்களுடன் அஹ்லே சுன்னத் வல் ஜமாஅத்தின் தெளிவான தகவல்களையும், புத்தகங்களையும், பயான்களையும் பகிர்ந்து கொள்கிறோம்.

குத்பியா மன்ஜில் என்ற பெயர் மாதிஹிர் ரசூல் சதகத்துல்லாஹ் அப்பாவின் யா குத்பா பைத்தில் நின்றும் வந்ததாகும். மேலும் இந்த பெயர் கெளதுல் அஃலம் நாயகத்தின் உதவியை நாடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. கெளதுல் அஃலம் நாயகத்தின் பேரராக விளங்கக் கூடிய அல் குத்புர் ரப்பானி அஸ்-ஸெய்யது அப்துஷ் ஷகூர் அல்-ஜீலானி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் நினைவாக, அவர்களின் ஊழியராகிய அஸ்ஷெய்கு ஹஜ்ரத் ஜலீல் முஹியத்தீன் காதிரி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களால் தொடங்கப்பட்டது.

வரலாற்று சுருக்கம்:

எங்களின் காயல்பட்டிணம் மன்ஜில் - இந்தியா.
தொடக்கம்: 1411 ஸஃபர் 5 (1990, ஆகஸ்ட்)
தொடக்கி வைத்தவர்: மூஸல் காழிம் ஜலாலிய்யுல் புஹாரி தங்கள் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள்

எங்களின் கொழும்பு மன்ஜில் - ஸ்ரீலங்கா.
தொடக்கம்: 1413 ஸஃபர் 5 (1992, ஆகஸ்ட்)
தொடக்கி வைத்தவர்: செய்யது முஹம்மது இப்னு செய்யது யாஸீன் மெளலானா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள்

மன்ஜிலில் நடைபெறும் நிகழ்வுகள்:

 

1. தினமும் நடைபெறும் மஜ்லிஸ்: 

இது ரலினாபில்லாஹியைக் கொண்டு ஆரம்பித்து சூரா பாத்திஹா, சூரா யாஸீன், சூரா துஹான், சூரா முல்க், சூரா வாகிஆ, அவ்ராதுகள், ஸலவாத்துகள் மற்றும் துஆவுடன் முடிவடையும். அவ்லியாக்கள் மற்றும் சாலிஹானவர்களுடைய நினைவு தினங்கள் கொண்டாடப்படும்.

 

2. வார மஜ்லிஸ்கள்:

அ. வெள்ளி கிழமை - ஸலாம் பைத்: நபிமார்கள், வலிமார்களுக்கு ஸலாம் சொல்லுதல், ஸலவாத்துக்கள் மற்றும் இதர ஓதல்கள்.
ஆ. செவ்வாய் கிழமை - ஆண் உலமாக்களைக் கொண்டு பயான் [இந்தியா]


3. மாத மஜ்லிஸ்கள்:
i. ஓவ்வொரு பிறை 14ல் - பெண்கள் ஸலவாத் நாரிய்யா மஜ்லிஸ் [இந்தியா].
ii. ஓவ்வொரு பிறை 24ல் - ஆண்கள் ஸலவாத் நாரிய்யா மஜ்லிஸ் [இந்தியா].
iii. குறைந்தது ஓவ்வொரு மாதமும் மூன்று முறை முக்கியமான தினங்களில் குத்பியா மஜ்லிஸ்.
 

4. வருட மஜ்லிஸ்கள்:
i. மீலாது நபி கொண்டாட்டம்: ரபிவுல் அவ்வல் 1-லிருந்து 12 வரை சுப்ஹான மெளலிது, புகழ் பாடல்கள் ஓதப்படும். ரபிவுல் அவ்வல் 12ல் சுன்னத் வல் ஜமாஅத்திற்க்காக தங்களை யார் அர்பணித்து கொண்டார்களோ அவர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.


ii. கெளதுல் அஃலம் நாயகம் உரூஸ்: ரபிவுல் ஆகிர் 1-லிருந்து 11 வரை முஹியத்தீன் மெளலிது, புகழ் பாடல்கள் ஓதப்படும். பிறை 11ல் விஷேச குத்பியா மஜ்லிஸ் நடைபெறும். (இதை போல் ஓவ்வொரு தரீக்கா தலைவர்களுடைய நினைவு நாட்களும் கொண்டாடப்படும்).iii. தர்பா அப்பா உரூஸ்: ஜமாதுல் ஆகிர் 12ல் விஷேசமாக கொண்டாடப்படும். மற்ற அவ்லியாக்களின் நினைவு நாட்களும் இவ்வாறே கொண்டாடப்படும்.

iv. புது வருட நிகழ்ச்சிகள்:

ஹிஜ்ரி (சந்திர காலண்டர்): இஸ்லாமிய புது வருட விஷேச நிகழ்ச்சிகள்.
ஈஸவி (சூரிய காலண்டர்): புது வருட நிகழ்ச்சி - டிசம்பர் 31 இரவு.
டிசம்பர் 25ல் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பிறந்த நாள் குர்ஆனுடைய அடிப்படையில் கொண்டாடப்படும். கிறுஸ்தவர்களின் தவறான நம்பிக்கைக்கு சரியான விளக்கம் கொடுக்கப்பட்டு, ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய உண்மையான சரித்திரம் தெளிவாக விளக்கப்படும்.


v. ரமழான் மாதம்:

ஓவ்வொரு நாளும் காலை 10.30 முதல் 12.00 வரை வித்ரிய்யா ஷரீஃப் ஓதப்பட்டு அதற்க்கு விளக்கமும் கொடுக்கப்படும். [இந்தியா]
ஓவ்வொரு நாளும் இரவு தராவீஹ், வித்ரு தொழுகைகள் நடத்தப்பட்டு ஸலவாத்துகள் ஓதப்படும். லைலத்துல் கத்ரு இரவில் விஷேச நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.


5. செயல்பாடுகள்:

1. முஹியத்தீன் மாணவர் மன்றம்:
முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களுடைய பெயரால் நடத்தப்படுகிறது. இந்த மன்றம் குத்பியா மன்ஜிலின் நோக்கங்களை மக்களுக்கு எடுத்துரைப்பதற்க்காக இணையதளம், டிவி, புத்தகங்கள் மூலமாக பல நிகழ்ச்சிகளை ஓளிபரப்புகிறது. கந்தூரி நிகழ்ச்சிகள், தாஹிரா, தப்ஸ், மற்றும் இதர மார்க்க நிகழ்ச்சிகளையும் நடத்துகிறது.


2. முஹியத்தீன் டிவி:

காயல்பட்டிணத்தில் 24 மணி நேரமும் ஓளிபரப்பபடுகிறது. இதில் சுன்னத் வல் ஜமாஅத்தின் பொதுவான நிகழ்ச்சிகள், பயான்கள், இஸ்லாமிய பாடல்கள், சிறுவர் நிகழ்ச்சிகள் நேரடியாகவும் பதிவுசெய்தும் ஓளிபரப்பபடுகிறது. எல்லா நிகழ்ச்சிகளும் பதிவுசெய்து அடுத்த தலைமுறைகளுக்காக பாதுகாக்கப்படுகிறது.

3. பாத்திமா மகளிர் மன்றம்:

பாத்திமா நாயகி ரலியல்லாஹூ அன்ஹா அவர்களின் பெயரால் செயல்படுகிறது.
இந்த மன்றம் பெண்களுக்கான ஸலவாத், கலிமா, தலை பாத்திஹா, மெளலிது, நிகழ்ச்சிகளை நடத்தும்.

4. அன்னை ஆயிஷா அறிவகம்:
ஆயிஷா நாயகி ரலியல்லாஹூ அன்ஹா அவர்களின் பெயரால் செயல்படுகிறது. இந்த அறிவகம் பெண்களுக்கான இஸ்லாமிய பயான்களை நடத்தும்.

5. பெற்றோருக்கு உபகாரம் செய்தல்:
பெற்றோரின் முக்கியத்துவத்தை உணர்த்துதல். குத்பியா மன்ஜில் உறுப்பினர்களுடைய பெற்றோர்களின் நினைவு நாட்களை சேகரித்து அந்த நாட்களில் அவர்களின் வருட பாத்திஹாவை நடத்துவது. இதன் மூலம் பிள்ளைகளை பெற்றோருக்கு நன்றி உள்ளவர்களாக ஆக்குவது.

6. அஹ்லு பைத் ஊழியர் மன்றம்:
அஹ்லு பைத்துகளை சங்கைபடுத்துவது (நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் இரத்த உறவு) & ஷெய்குமார்கள் (ரூஹானியத்தான உறவு). இதன் மூலம் அஹ்லு பைத்துகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துதல்.


எங்களை தொடர்பு கொள்ளும் முகவரி: [இந்தியா]

குத்பியா மன்ஜில்,

1, புதுக்கடை தெரு,

காயல்பட்டிணம் - 628 204.

தமிழ் நாடு. தென் இந்தியா.

தொலைபேசி: 0091 4639 284744.

 

எங்களை தொடர்பு கொள்ளும் முகவரி: [இலங்கை]

குத்பியா மன்ஜில்,

இலக்கம். 11/1, இராமனாதன் அவன்யூ,

தேஹிவளை, ஸ்ரீலங்கா.

தொலைபேசி: 0094 112739812.

 

 

வஸ்ஸலாம்

குத்பியா மன்ஜில்.

Email: webmaster@quthbiyamanzil.org